About Us

சர்வ வல்லமையுள்ள தேவனின் கிருபையினால் GOD HELPED US (GHU) CHARITABLE TRUST 28.11.2011-ல் அரசாங்கத்ததால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு எண்:541/2011 நாள்:28.11.2011. அன்பானவர்களே இந்த அறக்கட்டளை தொடங்குவதற்கு முதல்காரணம் நம்மை உருவாக்கின தேவன்தான். தேவன் தந்த இந்த திட்டத்தின் படி தான் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொறுப்பு வகிக்கும் ஒவ்வொரு வாலிபர்களும் பணக்காரர்கள் அல்ல. சராசரி குடும்பத்தை சார்ந்தவர்கள். நம்மை விட ஏழை மக்கள், ஏழை குழந்தைகள், வயதானவர்கள், சாப்பிட வழியில்லாதவர்கள், தெரு ஓரங்களில் இருப்பவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், தர்மம் எடுத்து பிழைப்பவர்கள், மாற்றுதிறனாளிகள் அப்படிப்பட்டவர்களை பார்க்கும் பொழுது தேவன் தந்த அந்த உந்துதல் தான் இந்த அறக்கட்டளை. சொல்லப்போனால் நானும் ஒரு மாற்றுதிறனாளிதான். சராசரி மனிதனை விட நான் குள்ளமான மனிதன். இந்த அறக்கட்டளை துவங்க வேண்டிய அவசியம் சில மனிதர்களின் வாழ்க்கை சரித்திரம் என்று கூட சொல்லலாம். தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு நம் இந்திய தேசத்தில் வந்து ஏழை மக்களுக்காய் தர்மம் ஏந்தி அவர்களுக்கு உதவி செய்து இன்றும் நம் நினைவில் நிற்கும்  பெருமதிப்பிற்குரிய அன்னை தெரசா அவர்கள், இந்தியாவில் ஒரு கிறிஸ்தவராய் வந்து, இங்கு நடைபெறும் உடன் கட்டை ஏறுதல், சிறுபிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் போன்ற செயல்களை ஒழித்து இந்தியாவிற்காக வாழ்ந்த மதிப்பிற்குரிய வில்லியம் கோரி போன்றவர்கள். மேலும் வசந்த் தொலைக்காட்சியில் புலன்விசாரணை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சார்ந்த தாய், தகப்பனை இழந்த மாற்றுதிறனாளியான ஒரு மகன் சிற்பவேலை செய்து தன் ஊரில் வசிக்கும் ஏழை பிள்ளைகளுக்கு படிப்பதற்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள் வாங்கி கொடுத்து அவர்களை படிக்க தூண்டும் ஒரு ஏழை மகன் அவன் அவர் 14. நல்ல வசதியான குடும்பத்தில் வாழ்ந்த ஒரு மனிதன் தான் காரில் வந்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாலத்தின் அடியில் தன்னுடைய மலத்தை தானே எடுத்து புசித்து தன்னுடைய பசியை போக்கி கொண்டிருக்கும் ஒரு பெரியவரை கண்டவுடன் அவரை சந்தித்து அவருக்கு வேண்டிய ஆகாரங்கள் மற்றும் வஸ்திரங்கள் போன்றவற்றை வாங்கி கொடுத்து இன்றும் ஏழை மக்களுக்காய் தொண்டு செய்து கொண்டிருக்கும்  தமிழ்நாட்டை சார்ந்த மதிப்பிற்குரிய ஒருவர். இப்படி எல்லோரையும் பார்க்கும் போது நாம் இன்று என்ன செய்தோம்? அல்லது செய்து கொண்டிருக்கிறோம்? ஒரு மனிதன் வாழ்வது குறைந்த பட்சம் 60 அல்லது அவன் பலத்தின் மிகுதியால் 80 ஆண்டுகள் என்று கூட சொல்லலாம். ஆனால் மரித்த பிறகு ஒன்றையும் நாம் எடுத்துக்கொண்டு சொல்ல முடியாது. அதனால் தான் மகா அலெக்சாண்டர் தான் மரிக்கும் தருவாயில் தன்னுடைய உயர் சிப்பந்திகளை நோக்கி சொன்னாராம் இந்த உலகம் முழுவதையும் ஆண்டு கொண்டிருந்ததான நான் சாகும் பொழுது என் கைகளை சவப்பெட்டியின் வெளியே இரண்டு கைகளையும் தொங்க விட வேண்டும் என்று காரணம் என்ன? இந்த உலகம் முழுவதையும் ஆண்ட மகாஅலெக்சாண்டார் மரித்து போகும் போது ஒன்றையும் கொண்டு செல்லவில்லை என்பதற்காய், தன் தாயின் வயிற்றில் நிர்வாணியாய் வந்தோம். வந்தது போல் திரும்ப செல்கிறோம், நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை. ஒன்றும் கொண்டு சொல்வதுமில்லை. ஆனால்...............தேவன் சொர்க்கத்தில்இருக்கும் போது ஒரு மனிதனை பார்த்து சொன்னாராம் நான் பசியாய் இருந்தேன், நீ எனக்கு ஆகாரம் தந்தாய்! நான் உடுக்க உடையில்லாமல் இருந்தேன் எனக்கு உடுக்க உடை தந்தாய், நான் படுக்க இடமில்லாமலிருந்தேன் எனக்கு இடம் படுக்க இடம் கொடுத்தாய் என்று. அப்பொழுது அந்த மனிதன் தேவனை நோக்கி நான் எப்பொழுது உமக்கு ஆகாரம் கொடுத்தேன், எப்பொழுது உமக்கு உடுக்க உடை தந்தேன், எப்பொழுது  நீர் என் வீட்டில் தங்க இடம் கொடுத்தேன் என்றானாம். அதற்கு தேவன் இந்த உலகத்தில் இருக்கிற ஏழைகள், பசியாயிருக்கிறவர்கள், வஸ்திரமில்லாதவர்கள், தங்க இடம் இல்லாதவர்கள், என்னுடைய பிள்ளைகள் ஆகிய இவர்களுக்கு நீ எதை செய்தாயோ அதை எனக்கே செய்தாய் என்றாராம்! இதை வாசித்து கொண்டிருக்கும் வாலிப சகோதர, சகோதரிகளே, பெரியவர்களே நீங்களும் மற்றவருக்கு உதவ தேவன் உங்களை அழைக்கிறார். பசியோடு, பட்டினியோடு, வியாதியோடு, வஸ்திரமில்லாதபடி, படுக்க இடமில்லாதபடி இருக்கிற நம்முடைய சகோதர, சகோதரிகள், தாய், தகப்பன் மார்கள், நம்முடைய சிறு பிள்ளைகள் இவர்களுக்கு உதவி செய்வோமா? நாம் இணைந்து இந்த பணியை செய்வோமா? அல்லது எங்களோடு இணைந்து செய்யாவிட்டாலும் நீங்களாகவே அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யலாமே இது தான் நம்மை உருவாக்கின தேவனுடைய சித்தம் எங்களோடு சோந்து நீங்கள் தேவனுடைய பெரிதான பணியினை செய்ய அழைக்கிறோம். விரும்பினால் எங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் எங்கள் வெட்சைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நன்றி